Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வழக்கறிஞர் முதல் இங்கிலாந்து பிரதமர் வரை: கீர் ஸ்டார்மர் கடந்து வந்த பாதை!

07:16 PM Jul 05, 2024 IST | Web Editor
Advertisement

இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரிட்டனின் அடுத்த பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கிறார். அவரின் பின்னணியைக் காணலாம்.

Advertisement

பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. இதனால் நேற்று பிரிட்டனில் ஒரேகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும், தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதின.

நேற்று (ஜூலை 4) காலை தொடங்கிய தேர்தல் இரவு 7 மணிக்கு சுமூகமாக முடிந்தது. தொடர்ந்து இன்று (ஜூலை 5) காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. இதன்படி ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை. கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 412 இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கிறது. அதே வேளையில், தொழிலாளர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ள கீர் ஸ்டார்மரின் பின்னணியைக் காணலாம்.

யார் இந்த கீர் ஸ்டார்மர்?: 

கீர் ஸ்டார்மர் 1962-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி லண்டனில் சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாய் செவிலியராகவும், தந்தை கருவி தயாரிப்பாளராக வேலை செய்து வந்தார். பள்ளிப் படிப்பை முடித்த ஸ்டார்மர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இவருடன் பிறந்தவர்கள் மூன்று நபர்கள் ஆவார்கள். இவர் சட்டத்துறையில் நிபுணத்துவம் கொண்டவராக அறியப்படுகிறார்.

கெய்ர் ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக இருந்தார். டோனி பிளேயர் பிரதமராக இருந்த போது பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்த நிலையில், அதை மிகக் கடுமையாக எதிர்த்தவர் கெய்ர் ஸ்டார்மர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு  தந்தையாக  உள்ளார். இவர், மிக நவீன அரசியல்வாதியாக பார்க்கப்படுகிறார்.

மேலும் 2003 முதல் 2008 வரை ஐந்து ஆண்டுகள் வடக்கு அயர்லாந்து காவல் வாரியத்தின் சட்ட ஆலோசகராக இருந்தார். அதோடு, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவரது சேவையைப் பாராட்டும் வகையில் கடந்த 2014 இல் மறைந்த ராணி எலிசபெத் இவருக்கு நைட்ஹுட் பட்டம் வழங்கி சிறப்பித்தார். இவர் திறமையான இசைக்கலைஞராகவும் அறியப்படுகிறார்.

2015-ம் ஆண்டில் தான் இவர் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார். ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் எம்.பி.யாக தேர்வானார். இவரின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உடனடியாக தொழிலாளர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன.

2017 மற்றும் 2019 இல் தேர்தல் தோல்விகளை தழுவிய பிறகு, மீண்டும் கட்சியை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை வழிநடத்த ஸ்டார்மர் தேர்வு செய்யப்பட்டார்.  இதையடுத்து ஸ்டார்மர் 2020 இல் தொழிலாளர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, பிரிட்டனின் பிரதமராக பதவியேற்கவுள்ளார். நாட்டிற்கே முதலிடம், கட்சியை இரண்டாவது இடத்தில்தான் வைத்துள்ளேன் என இவர் உறுதியளித்து நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்ததாக கூறப்படுகிறது.

Tags :
conservative partykeir starmerLabour PartyNews7Tamilnews7TamilUpdatesUK
Advertisement
Next Article