ஜான்சினா முதல் விராட் கோலி வரை, ஒவைசி முதல் ரொனால்டோ வரை கும்பமேளாவில் பங்கேற்றனரா? - வைரல் படங்கள் உண்மையா?
This News Fact Checked by ‘FACTLY’
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்றதாகக் கூறப்படும் நடிகர்கள், அரசியல்வாதிகள், மல்யுத்த வீரர்கள் மற்றும் விளையாட்டுப் வீரர்களை கொண்ட பல படங்கள் ( இங்கே , இங்கே , இங்கே , இங்கே, இங்கே , இங்கே மற்றும் இங்கே ) சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகின்றன. இந்த படங்களின் உண்மைத் தன்மையை விரிவாக ஆராய்வோம்
பிரபல மல்யுத்த வீரரான் ஜான்சினா, ப்ரோக் லெஸ்னர் மற்றும் டுவைன் ஜான்சன் (ராக்) போன்ற மல்யுத்த வீரர்களின் படங்கள் ( இங்கே , இங்கே & இங்கே ) கும்பமேளாவில் பங்கேற்றதாக பரவலாக பரப்பப்படுகின்றன. இந்திய மல்யுத்த வீரர்களான கிரேட் காலியை தவிர்த்து பிற வெளிநாட்டு மல்யுத்த வீரர்கள் கும்பமேளாவில் பங்கேற்றதற்கான உறுதிப்படுத்தும் நம்பகமான அறிக்கைகள் இன்றுவரை கிடைக்கவில்லை.
நரேந்திர மோடி, அசாதுதீன் ஒவைசி, டொனால்ட் டிரம்ப், விளாடிமிர் புடின், எலோன் மஸ்க் மற்றும் பிரகாஷ் ராஜ் போன்ற அரசியல் பிரமுகர்களைக் கொண்ட மற்றொரு படத்தொகுப்பு ( இங்கே , இங்கே & இங்கே ) கும்பமேளாவில் அவர்கள் பங்கேற்றதாக பகிரப்படுகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷாவை தவிர்த்து பிற தலைவர்கள் கும்பமேளா நிகழ்வில் பங்கேற்பதை உறுதிப்படுத்தும் நம்பகமான அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை. இதை எழுதும் நேரத்தில், பிரதமர் மோடி 05 பிப்ரவரி 2025 அன்று கும்பமேளாவிற்கு வருகை தருவார் என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. மேலும் பிரகாஷ்ராஜின் குழு அவர் பங்கேற்கவில்லை என மறுத்துள்ளது .
பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்றதாகக் கூறி, ஆலியா பட், அனுஷ்கா ஷர்மா, கத்ரீனா கைஃப் மற்றும் விளையாட்டு வீரர்களான விராட் கோலி, லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்றவர்கள் இடம்பெற்றுள்ள மற்றொரு படத்தொகுப்பு ( இங்கே , இங்கே & இங்கே ) பகிரப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, இந்த நிகழ்வில் அவர்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தும் நம்பகமான அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை. கூடுதலாக, அவர்களின் சமூக ஊடக பக்கங்களிலும் அத்தகைய படங்கள் வெளியாகவில்லை.
முடிவு :
2025 பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக மல்யுத்தம், அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களில் படத்தொகுப்பு வைரலானது. இதுகுறித்து ஆய்வு செய்ததில் வைரல் படங்கள் AI-யால் உருவாக்கப்பட்டவை மற்றும் அவற்றின் நம்பகத்தன்மையை ஆதரிக்க எந்த நம்பகமான ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகிறது
Note : This story was originally published by ‘FACTLY’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.