Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிசம்பர் 1 முதல் மலேசியா செல்ல விசா தேவை இல்லை!

10:16 AM Nov 27, 2023 IST | Web Editor
Advertisement

வரும் 1-ம் தேதி முதல் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் மலேசியாவுக்கு பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மலேசியாவிற்கு செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய நடைமுறை அறிமுகம் செய்வதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிட்டதாவது,  சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு,  சீனா மற்றும் இந்தியாவையும் சேர்ந்தோர் இனி விசா இன்றி மலேசியாவுக்குள் நுழையலாம்.  இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசா இன்றி 30 நாள்கள் வரை தங்கலாம்.

இதையும் படியுங்கள்: திருப்பதியில் பிரதமர் மோடி – ஏழுமலையானை தரிசித்து வழிபாடு..!

புதிய நடைமுறை அடுத்த மாதம் (டிச.1) ஒன்றாம் தேதி முதல் நடமுறைக்கு கொண்டுவரப்படும்.  விசா தேவயில்லை என்றாலும் பயணிகள் குற்றப்பின்னணி அல்லது வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனரா என்பதை அறியப் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும்.  இந்தியாவை விட சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வர அதிக வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டார்.

Tags :
Anwar bin IbrahimchinaIndiaMalaysianews7 tamilNews7 Tamil Updatesprime ministervisa
Advertisement
Next Article