Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரான்ஸ் பிரதமர் பதவி விலகல்..!

பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகோர்னு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
03:40 PM Oct 06, 2025 IST | Web Editor
பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகோர்னு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
Advertisement

பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகோர்னு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த செபாஸ்டியன் லெகோர்னு கடந்த செப்டம்பர் 9 -ம் தேதி பிரான்சின் 47வது பிரதமராக பதவியேற்றார்.

Advertisement

மேலும் பல வார ஆலோசனைக்கு பிறகு நேற்று தனது அமைச்சரவையை நியமித்தார். மேலும் அதன் முதல் கூட்டத்தை இன்று (திங்கள்) பிற்பகல் நடத்தத் திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் பிரதமராக பதவியேற்று  27 நாட்களே ஆகியுள்ள நிலையில் செபாஸ்டியன் லெகோர்னு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை தொடர்ந்து லெகோர்னுவின் பதவி விலகலை அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரான்சின் அடுத்த பிரதமராக  யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து, ஜனாதிபதி மேக்ரோன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags :
FrancefrancepmlatestNewsSebastien Lecornu
Advertisement
Next Article