புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!
ஒடிசாவின் புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே, சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே இன்று காலை 8.30 மணிக்கு ஓங்குல் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் இருபெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே துறை பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சரக்கு ரயில் தடம் புரண்ட சம்பவத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை தகவல் வெளியாகியுள்ளது.
புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் ரயில் சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், விரைவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றும் மேற்கு வங்கத்தின் ராணாகாட்டில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. அப்போதும் எந்தவிதமான உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. ஆனால் சரக்கு ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடதக்கது.