Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இவர்களுக்கெல்லாம் #MovieTicket இலவசம்.. - 'போகுமிடம் வெகுதூரமில்லை' படக்குழு அறிவிப்பு!

06:06 PM Aug 22, 2024 IST | Web Editor
Advertisement

போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுனர்களுக்கு முதல் நாள் மட்டும் டிக்கெட் இலவசம் என அறிவிப்பை அறிவித்துள்ளனர்.

Advertisement

மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை'. இந்த  திரைப்படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த திரைப்படத்தில் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தெருக்கூத்து கலைஞராக கருணாஸ் நடித்துள்ளார். அரசியல் புள்ளி ஒருவர் இறந்துவிட அவரது உடலை ஏற்றிக்கொண்டு அவர் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் களக்காடை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து  இந்த திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் #ChiefSecretary முருகானந்தம் சந்திப்பு!

இந்த திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளனர். அதில் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுனர்களுக்கு மட்டும் டிக்கெட் இலவசம் முதல் நாள் மட்டும் என அறிவிப்பை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக, படக்குழு போஸ்டரை வெளியிட்டு தகவலை பதிவிட்டுள்ளது. இதில், அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்களே தங்களது ID CARD-ன் போட்டோவை வாட்ஸ்அப் நம்பருக்கு 9884849790 அனுப்பி 'போகுமிடம் வெகு தூரமில்லை' படத்தின் டிக்கெட்யை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளனர்.

 

Tags :
Amarar Urthi driversambulancepogumidam veguthooramillaiReleaseTicketsTOMORROW
Advertisement
Next Article