“IPL போட்டிகளுக்கு இலவச பேருந்து டிக்கெட் - அரசு செலவல்ல!” - தமிழ்நாடு அரசு!
ஐ.பி.எல். போட்டிகளைக் காண வருபவர்கள், மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற செய்தி தவறாகத் திரிக்கப்பட்டிருப்பதாகவும் இது அரசின் செலவல்ல என்றும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிக்கெதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி இருபது ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது.
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இதை தமிழக போக்குவரத்து கழகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அரசு சார்பில் வெளியான அறிவிப்பில், “அந்தச் செய்தி தவறாகத் திரிக்கப்பட்டதே!
சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டிகளைக் காண வருபவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அரசு செலவில் இலவசப் பேருந்து சேவை வழங்கவில்லை. போக்குவரத்து கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள சிஎஸ்கே அணி நிர்வாகம் பயணச்செலவை போக்குவரத்துத் துறைக்கு செலுத்தி விட்டனர்.
சென்ற வருடம் நடந்த ஐபிஎல் போட்டிகளிலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைந்து டிக்கெட் வைத்திருந்த ரசிகர்களுக்கு மட்டும் இலவச மெட்ரோ பயண சேவை அறிவித்திருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.