Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பேஸ்புக்கில் போலி கணக்கு - டிஐஜி திருநாவுக்கரசு பெயரில் நூதன மோசடி!

07:47 AM Feb 27, 2024 IST | Web Editor
Advertisement

உளவுத்துறை டிஐஜி திருநாவுக்கரசு பெயரில் போலியான முகநூல் கணக்கை தொடங்கி மோசடி செய்துள்ளனர்.

Advertisement

முதலமைச்சரின் தனி பாதுகாப்பு பிரிவு அதிகாரியாகவும், உளவுத்துறை டி.ஐ.ஜியுமாக
பணியாற்றி வருபவர் திருநாவுக்கரசு.  டி.ஐ.ஜி திருநாவுக்கரசின் புகைப்படம்
மற்றும் பெயரை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போலியான முகநூல் கணக்கை உருவாக்கி உள்ளார். பின்னர், திருநாவுக்கரசின் நண்பரான சிவகுமார் என்பவரை மெசெஞ்சர் மூலமாக தொடர்பு கொண்டு உள்ளார்.

இதையும் படியுங்கள் : சட்டவிரோத செயல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்கள் படத்தில் நடிக்க மாட்டேன் - ஜாபர் சாதிக் கைது குறித்து அமீர் அறிக்கை!

இதையடுத்து, அந்த மோசடி நபர் சி.ஆர்.பி. எப் முகாமில் உள்ள தனது நண்பர் சந்தோஷ்
குமார் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், அவர் தனது வீட்டில் உள்ள உபயோகப்
பொருட்களை குறைவான விலையில் விற்க விரும்புவதாகவும், தனக்கு அந்த பொருட்களை
வாங்க உடனடியாக பணம் தேவைப்படுவதாக கூறி அந்த மோசடி நபர் சிவகுமாரிடம்
தெரிவித்துள்ளார்.

இதில், சந்தேகம் அடைந்த சிவகுமார் உடனடியாக டி.ஐ.ஜி திருநாவுக்கரசரை தொடர்பு
கொண்டு இது குறித்து கூறியுள்ளார். அப்போது அது மோசடி நபர் எனவும் தனது பெயரில்
உருவாக்கப்பட்ட போலியான ஐடி எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது பெயரை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றிய அந்த மோசடி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அந்த போலி ஐடியை உடனடியாக அழிக்க வேண்டும் என திருநாவுக்கரசு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலியான முகநூல் கணக்கை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றிய  அடையாளம் தெரியாத நபரை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபய் குமார் சிங் என்பவரின் பெயரில் போலியான ஐடி உருவாக்கி, பொதுமக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
ChennaiFacebookfake accountfraudTamilNaduThirunavukarasu
Advertisement
Next Article