Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காஸா போரில் காயமடைந்த குழந்தையின் பேரில் இந்தியாவில் மோசடி - உண்மை சரிபார்ப்பில் கண்டறிந்தது என்ன?

04:38 PM Nov 21, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by Aajtak

Advertisement

காஸாவில் நடைபெற்ற போரில் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் வீடியோவை பயன்படுத்தி, அக்குழந்தை இந்தியாவை சேர்ந்தவர் என்று நிவாரண நிதி திரட்டப்படுகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

மருத்துவமனைப் படுக்கையில் படுத்திருக்கும் சிறுமி அழுவது போன்ற சமூக வலைதளங்களில் கவலையளிக்கும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. சில சமூக ஊடக பயனர்கள் இந்த சிறுமியின் வீடியோவை அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது போல் தோன்றும் வகையில் முன்வைத்து, அக்குழந்தையின் பெயரில் நன்கொடைகள் கோரப்படுகின்றன. அச்சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சிறுமி மிகவும் காயமடைந்ததாகத் தெரிகிறது.

சில சமூக வலைதளவாசிகள் இந்த சிறுமியின் வீடியோவை அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும், சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவது போலவும் காட்சிப்படுத்துகின்றனர். வீடியோவுடன் ஒரு QR குறியீடும் உள்ளது. "தயவுசெய்து என் மகளுக்கு உதவுங்கள், குறைந்தபட்சம் ரூ.200 நன்கொடை அளிக்கவும்" என்ற மேற்கோளுடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

இந்த  வீடியோவை, ​​ஸ்ரீராம் ஃபேமிலி என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு, "உதவி தேவை, பணத்தை நன்கொடையாக அளியுங்கள்" என்று பகிர்ந்திருந்தது.

வைரல் பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை காணலாம். இந்த வீடியோவில் காணப்பட்ட பெண் இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல, காஸாவைச் சேர்ந்தவர் என்பது ஆஜ் தக் உண்மைச் சோதனையில் கண்டறியப்பட்டது. இதை சிறுமியின் தந்தை முஹம்மது ஆஜ் தக்கிடம் கூறியுள்ளார்.

உண்மை சரிபார்ப்பு:

வைரலான வீடியோவில், சிறுமி படுத்திருக்கும் படுக்கையில் விரிக்கப்பட்ட படுக்கை விரிப்பில் அரபு மொழியில் ஏதோ எழுதப்பட்டுள்ளது. அதை கூகுள் லென்ஸ் மூலம் ஆராய்ந்து பார்த்ததில் அதில் ஒரு வார்த்தையின் மொழி பெயர்ப்பு 'ஆரோக்கியம்' என்பது தெரிந்தது. 

இதைப் பார்த்ததும், இந்த வீடியோ அரபு மொழி பேசப்படும் நாட்டிலிருந்து வந்ததாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது.

வீடியோவின் கீஃப்ரேம்களைத் தலைகீழாகத் தேடுவதன் மூலம், இது ஜூலை மாதத்தில் சில சமூக ஊடக பயனர்களால் பகிரப்பட்டது மற்றும் அல் ஜசீரா பத்திரிக்கையாளர் மோத் கஹ்லவுட்டுக்கு அதன் பெருமை வழங்கப்பட்டது என்பதைக் கண்டறியப்பட்டது. மோத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பார்க்கும்போது, ​​அவர் காஸா தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து தெரிவித்து வருவதாகத் தெரிகிறது. 

Moath Kahlou இந்த வீடியோவை ஜூலை 7 அன்று பகிர்ந்துள்ளார். மேலும், இந்த சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் இறந்துவிட்டதாகவும், அவர் மட்டும் உயிருடன் இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. 

ஆனால், மோத் ஜூலை 9 ஆம் தேதி மற்றொரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். சிறுமி நிஸ்ரீனின் தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பது தனக்குத் தெரிந்ததாக அந்த வீடியோவில் கூறினார். இந்த வீடியோவில் சிறுமியின் தந்தை காணப்படுகிறார். மேலும் அவரது தொலைபேசி எண்ணும் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.

சிறுமியின் தந்தையை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு கூகுள் உதவியுடன் அரபியில் மொழி பெயர்த்து பேசப்பட்டது. அவர் ஆஜ் தக்கிடம் தனது பெயர் முஹம்மது என்றும், வைரலான வீடியோவில் காணப்பட்ட பெண் தனது இரண்டு வயது மகள் நிஸ்ரீன் என்றும் கூறினார். ஜூலை மாதம் குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது எனவும் தெரிவித்தார். ஜூலை மாதம் வடக்கு காசாவில் நடந்த குண்டுவெடிப்பில் அவரது வீடு முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். அவர் பலத்த காயமடைந்தார். ஆனால் எப்படியோ அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. 

இந்தியாவில் உள்ள எந்தவொரு நபரிடமிருந்தோ அல்லது அமைப்பிடமிருந்தோ பணம் பெறவில்லை என்றும், இந்த தொலைபேசி எண்ணுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் முஹம்மது கூறினார். இது ஒரு மோசடி என்று கூறி, அரபு மொழியில் ஒரு செய்தியை கொடுத்தார். அதன் இந்தி மொழிபெயர்ப்பை கீழே காணலாம்.

வைரலான வீடியோவில் காணப்படும் QR குறியீட்டை Google Pay உதவியுடன் ஸ்கேன் செய்ததில், அதுல் சிங் என்ற நபரின் UPI முகவரி கண்டறியப்பட்டது. மேலும், இந்த எண் 'அதுல் ஆக்சஸரீஸ்' என்ற கடைக்கு சொந்தமானது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த எண்ணை ட்ரூகாலர் செயலியில் தேடியபோது, ​​அதுல் சிங் என்ற பெயர் மற்றும் இடம் உத்தரபிரதேசம் என காட்டியது.  

அதன் பிறகு இந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அழைப்பை எடுத்த நபர், தான் கோரக்பூரில் வசிப்பதாகவும், சிறுமி கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த காணொளியை தானே தயாரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் விசாரித்தபோது அவர் அழைப்பை துண்டித்துவிட்டார். 

முடிவு:

காஸாவைச் சேர்ந்த காயமடைந்த சிறுமியின் வீடியோவைக் கொண்டு உணர்ச்சிகரமாக பேசி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது.  

Note : This story was originally published by ‘Aajtak’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
AttackFact CheckGazaGenocideInjured ChildNews7Tamilviral video
Advertisement
Next Article