Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரான்ஸ் புதிய பிரதமர் #MichelBarnier நியமனம்!

08:01 PM Sep 05, 2024 IST | Web Editor
Advertisement

பிரான்சின் புதிய பிரதமராக முன்னாள் பிரெக்சிட் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியர் நியமிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

பிரக்ஸிட் பேச்சுவார்த்தையாளரான மைக்கேல் பார்னியரை பிரான்ஸ் புதிய பிரதமராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று நியமித்துள்ளதாக எலிஸி அரண்மனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2016 - 2021 வரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர் மைக்கேல் பார்னியர் (73).

இதையும் படியுங்கள் : Paralympics 100 மீட்டர் ஓட்டம் | இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை சிம்ரன்!

மைக்கேல் பார்னியர் புரூசெல்ஸ் நகரில் மிகவும் பிரபலமானவராக இருந்தாலும், பிரான்ஸ் நகரில் அவ்வளவு பிரபலமானவர் அல்ல என்று கூறப்படுகிறது. அவர் லெஸ் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினராவார். இந்நிலையில் தற்போது, பார்னியர் ஒரு அரசை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மே மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் பிரான்ஸில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டது. இடதுசாரி மக்கள் முன்னணி அதிக இடங்களை வென்றது. ஆனால், முழுமையான பெரும்பான்மை பெறவில்லை. இந்த நிலையில் தான் அதிபர் இமானுவேல் மேக்ரானால், பிரான்ஸ் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் மூலம் வரலாற்றில் 5-ஆவது குடியரசின் மிகவும் வயதான பிரதமர் எனும் பெயரை மைக்கேல் பார்னியர் பெறுவார்.

Tags :
FranceMichel BarnierNews7Tamilnews7TamilUpdatesprime minister
Advertisement
Next Article