இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி! 302 ரன்கள் குவித்த இங்கிலாந்து!
07:03 PM Feb 23, 2024 IST
|
Web Editor
இதனை அடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி- பென் டக்கெட் ஆகியோர் களம் இறங்கினர். டக்கெட் 11 ரன்கள் எடுத்த போது ஆகாஷ் தீப் பந்து வீச்சில ஆட்டமிழந்தார். டக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை ஆகாஷ் தீப் கைப்பற்றினார். இதே ஓவரில் ஒல்லி போப் ரன் ஏதும் எடுக்காமலும் அதற்கு அடுத்த ஓவரில் கிராலி 42 ரன்களிலும் ஆகாஷ் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேர்ஸ்டோ எல்.பி.டபிள்யூ. முறையில் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனையடுத்து ஜோ ரூட் - போக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 100 அமைத்து கெளவுரமான ஸ்கோரை எட்டியது. சிறப்பாக ஆடிய போக்ஸ் 47 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹார்ட்லி 13 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இதனை தொடர்ந்து 8-வது விக்கெட்டுக்கு ரூட்டுடன் ராபின்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராபின்சன் அவ்வபோது பவுண்டரி சிக்சர்களை பறக்கவிட்டார். இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும் சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ரூட் 106 ரன்களிலும் ராபின்சன் 31 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
Advertisement
இந்தியா - இங்கிலாந்து மோதும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 302 ரன்கள் குவித்தது.
Advertisement
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்ட் முடிவில், இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ராஞ்சியில் இன்று (பிப்.,23) துவங்கியது. இதில் 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஆகாஷ் தீப் அறிமுகமானார்.
Next Article