ராஜஸ்தானில் டைனோசர் காலத்திய உயிரினத்தின் படிமங்கள் கண்டுபிடிப்பு!
பல நூற்றாண்டுகளுக்கு முன் பூமியில் டைனோசர் என்னும் உயிரினம் வாழ்ந்து வந்ததாகவும், இயற்கை பேரழிவுகளால் அவை முற்றிலும் அழிந்ததாகவும் நம்பப்படுகிறது. டைனோசர் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கண்டறியும் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 1993-ல் இயக்கிய ஜுராசிக் பார்க் திரைப்படமானது உலகெங்கும் டைனோசரை பிரபலமாக்கியது.
ஜெய்சால்மர் மாவட்டத்தில் பதேகர் பகுதியில் உள்ள மேகா கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் அருகே கடந்த வாரம் 21 ஆம் தேதி உள்ளூர் வாசிகள் தோண்டியுள்ளனர். அபோது அங்கு பழமையான உயிரினத்தின் புதை படிவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உள்ளூர்வாசிகளின் தகவலின் பேரில் தொல்லியல் துறை அங்கு வந்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இந்த படிமமானது டைனோசர் காலத்தைச் சேர்ந்த பைட்டோசார் உயிரினத்தின் புதைபடிவம் மற்றும் முட்டைகள் என தொல்லியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். முதலை போன்ற ஊர்வன இனத்தை சேர்ந்த இந்த வகை உயிரினம் நீர் நிலைகளுக்கு அருகில் வாழ்ந்து மீன்களை சாப்பிட்டு வாழும் எனவும் தெரிவித்துள்ளர்.
இந்த உயிரினம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது எனவும் தெரியவந்துள்ளது.