Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நாற்பதுக்கு நாற்பது என்பது சாதாரண வெற்றி அல்ல ; மகத்தான சாதனை" - திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

09:12 PM Jun 08, 2024 IST | Web Editor
Advertisement

" நாற்பதுக்கு நாற்பது என்பது சாதாரண வெற்றி அல்ல , மகத்தான சாதனை " என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Advertisement

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

  மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளமும், தெலுங்கு தேசமும் பாஜகவுக்கான தங்களது ஆதரவை உறுதிபடுத்தியதையடுத்து, மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளை வென்றுள்ளது. இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த நிலையில் திமுக சார்பில் வெற்றி பெற்ற எம்பிக்கள் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் , திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,  பொன்முடி,  டி.ஆர்.பாலு  உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது..

” நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி என்பது சாதாரணமான வெற்றி அல்ல. கடந்த 2004ம் ஆண்டு,  20 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நமக்குப் பெற்றுத் தந்த வெற்றி இது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த தேர்தலில் அந்த ஒன்றையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை நாம்  வென்றுவிட்டோம்

இரண்டாவது தேர்தலில், முழுமையான வெற்றியைப் பெறுவது என்பது சாதாரணமான சாதனை அல்ல, வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாகும்.  ஒரு சில மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் லேசாக மாறி இருந்தால் I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்.

அதே நேரத்தில் மிகப்பெரிய பெரும்பான்மையை மட்டுமல்ல, ஆட்சி அமைக்கத் தேவையான அளவுக்கு செல்வாக்கைக்கூட பாஜக அடைய வில்லை.  370 தொகுதிகளில் வெற்றி பெறுவோம், 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி 240-க்கு இறங்கிவிட்டது பாஜக” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
DMKdmk mpsElection2024Lok Sabha Election2024MK Stalin
Advertisement
Next Article