Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Formula4 ஹைதராபாத் வீரர் அலிபாய் முதலிடம் - அமைச்சர் #UdhayanidhiStalin பரிசுகளை வழங்கினார்!

06:23 AM Sep 02, 2024 IST | Web Editor
Advertisement

பார்முலா 4 கார் பந்தயம் நிறைவு பெற்றதை தொடர்ந்து முதலிடம் பிடித்த ஹைதராபாத் வீரர் அலி பாய் உட்பட முதல் மூன்று இடம்பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினர்.

Advertisement

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இந்தியன் ரேஸிங் லீக் மற்றும் பார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டிகள் ஆகஸ்ட் 31ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றன. இறுதி நாளான நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 10:45 மணி வரை, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. சோதனை ஓட்டம், தகுதிச் சுற்றுப் போட்டிகள் என பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடைபெற்றது. நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன. 

தகுதிச்சுற்று முதல் போட்டியின் ரவுண்டு 2, FLGP 4 கார் பந்தய போட்டியில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் மின்னல் வேகத்தில் பந்தய கார்களை இயக்கினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் இந்தியாவின் மெக்பெர்சன் 2 நிமிடம் மூன்று வினாடிகளில் முதலிடத்தை பிடித்து அசத்தினார். இரண்டாவது இடத்தை தில்ஜித் மற்றும் மூன்றாவது இடத்தை டத்தா பிடித்தனர். இதனைத் தொடர்ந்து ஐ ஆர் எல், ஃபார்முலா 4யின் தகுதி சுற்று போட்டிகளும் சுற்று மற்றும் பிரதான சுற்று போட்டிகள் நடைபெற்றுள்ளது.

அதனைத்தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஐஆர்எல் -டிரைவர் ஏ பிரிவு தகுதிச் சுற்று போட்டிகளும், மாலை 3:55 மணி முதல் மாலை 4:35 மணி வரை எல்ஜிபி 4 பிரிவு பந்தயங்களும் நடைபெற்றன. மாலை 4:50 மணி முதல் 5:35 மணி வரை, பார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் பந்தயங்களும், 5:50 மணி முதல் 6:35 மணி வரை ஐஆர்எல் – டிரைவர் ஏ பிரிவு போட்டிகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மாலை 6:45 மணி முதல் 7:45 வரை, ஒரு மணி நேரம் கார் பந்தய வீரர்களின் சாகச நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு 7:55 மணி முதல் 8:40 மணி வரை எல்ஜிபி 4 பிரிவு போட்டிகளும், 8:50 மணி முதல் 9:35 வரை பார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் பந்தயங்களையும் நடைபெற்றது. இறுதியாக 9:50 மணி முதல் 10:35 மணி வரை ஐஆர்எல் -டிரைவர் பி பிரிவு பந்தயங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் கார் பந்தயம் நிறைவில் ஹைதராபாத் அணியில் இடம்பெற்ற தென்னாப்பிரிக்க வீரர் அலிபாய் முதலிடமும், அகமதாபாத் அணியில் இடம்பெற்ற இந்திய வீரர் திவி நந்தன் 2வது இடமும், பெங்களூரு அணியில் இடம்பெற்ற ஜேடன் பாரியாட் 3வது இடமும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து இரவு 10:45 பந்தய சாலை மூடப்பட்டது.

Tags :
Formula 4Formula 4 Car RaceFormula 4 racing eventMinister UdhaynidhiUdhaynidhi Stalin
Advertisement
Next Article