சென்னையில் நடைபெறவுள்ள ‘ஃபார்முலா 4’ கார் பந்தயம்: டிக்கெட்டுகள் விற்பனை தொடக்கம்!
தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் கார் பந்தயத்திற்கான டிக்கெட்டுகளின் விற்பனை தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடட் ஆகியோர் இணைந்து நடத்தும், “ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4” கார் பந்தயம் சென்னையில் வரும்
டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தெற்காசியாவின் முதல் ஃபார்முலா 4 சர்வதேச இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் இரவு நேர கார் பந்தயங்களுக்கான டிக்கெட்டுகள், விற்பனையை அறிவித்துள்ளது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.
மேலும் Premium Stand ரூ.5949 (early bird), Grand Stand 1, 2, 3, 4, 5 ரூ.2125 (early bird), Gold Lounge ரூ.11899 , Platinum Lounge ரூ.16999 (early bird) ஆகிய பிரிவுகளில் இரண்டு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மாலை 4 மணி முதல் டிக்கெட்டுகள் பெற்றோர் கார் பந்தயத்தை காண அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.