Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் இன்று #Formula4 கார் பந்தயம் தொடக்கம்!

07:27 AM Aug 31, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் இரவு நேர பாா்முலா 4 காா்பந்தயம் இன்று தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது.

Advertisement

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் - 31ம் தேதி) மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிமீ தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது.

இந்நிலையில், 3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பார்முலா 4 கார் பந்தய சா்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம் , சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலை அடைவதுடன் நிறைவடைகிறது. பந்தயத்தின் பயிற்சி சுற்று, இன்று பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரையும், அதன் பிறகு பொழுதுபோக்கு சாகச கார் பந்தயமும் நடைபெறும். இதனை தொடர்ந்து தகுதிச் சுற்றுகள் இரவு 7.10 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். முதன்மை கார் பந்தயங்கள் 2 போட்டிகளாக நாளை நடைபெறும்.

இதையும் படியுங்கள் : Hosur -ல் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு! 76 வயது முதியவர் கைது!

பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன் ஷிப் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 5.05 மணிக்கும், 2- வது போட்டி இரவு 9.05 மணிக்கு தொடங்கும்.இந்தியன் ரேசிங் லீக் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 6.05 மணிக்கும், 2- வது போட்டி இரவு 10.05 மணிக்கு தொடங்கும். மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இதில், ஒவ்வொரு பந்தயமும் 5 ரவுண்டுகளை கொண்டது. ஐ.ஆர். எல். என்று அழைக்கப்படும் இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் 6 அணிகள் உள்ளன. இதுவும் 5 சுற்றுகளை கொண்டது. போட்டி நடைபெறவுள்ள சாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பாா்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளன.

Tags :
CarRaceChennaiFormula4carraceFormulaCarTamilNadu
Advertisement
Next Article