ஃபார்முலா 4 கார் பந்தயம்; தயாராகும் சென்னை - சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்!
ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்காக, சென்னை நேப்பியர் பாலம் மற்றும் சிவானந்தா சாலை, உள்ளிட்ட பகுதிகளில் 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடட் ஆகியோர் இணைந்து நடத்தும், "ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4" கார் பந்தயம் சென்னையில் வரும்
டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதையும் படியுங்கள்:சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து! நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம்!
இரவு நேரத்தில் நடைபெறும் இந்த கார் பந்தயதிற்காக, பிரத்யேக சாலை அமைக்க
ரூபாய் 8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், பந்தயத்திற்கு ஏற்றார் போல சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இரவு, பகல் பாராமல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நேப்பியர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நடைபாதைகள், தடுப்புகள் மற்றும் சாலைகள் அகற்றப்பட்டு, பந்தய தூரமான 3.5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதனால் சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை, தீவுத்திடல் சந்திப்பு
ஆகிய பகுதிகளில் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு ஆசியா மற்றும் இந்தியாவில் இந்த ஃபார்முலா 4 சர்வதேச கார்பந்தயம்
நடைபெறுவதும், குறிப்பாக இரவு பந்தயமாக நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.