Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சொத்துக்குவிப்பு வழக்கில் ட்ரம்ப் குற்றவாளி என தீர்ப்பு: ரூ.2,900 கோடி அபராதம்!

12:26 PM Feb 17, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு,  நியூயார்க் நீதிமன்றம் 355 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,900 கோடி) அபராதம் விதித்துள்ளது. 

Advertisement

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,  வணிக நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.  உடன்,  அவரது மகன்கள் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப்  ஆகியோர்களும் இந்த நிறுவனத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தான், கடந்த சில வருடங்களாக டிரம்ப் நிறுவனம் மூலம் சம்பாதித்த வருமானத்திற்கு உரிய கணக்கு வழக்குகள் தாக்கல் செய்யாமல் இருந்துள்ளார் என அவர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.  கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை முழுதாக முடிந்து தீர்ப்பு வெளியானது.

நீதிபதி ஆர்தர் என்கோரோன்,  "சொத்துகுவிப்பு வழக்கில், டொனால்ட் டிரம்ப் 355 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2900 கோடி ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.

Tags :
AmericaDonald trumpNew York CourtUSA
Advertisement
Next Article