Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆஜர்

02:01 PM Feb 09, 2024 IST | Web Editor
Advertisement

வட்டாட்சியர் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.  

Advertisement

கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்,  சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.  இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும்,  வட்டாட்சியருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.கஅழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து,  உதைத்ததாக வட்டாட்சியர் காளிமுத்து கீழவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து மு.க.அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி,  திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தது.  அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.

Advertisement
Next Article