Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ED அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் முன்னாள் அமைச்சர் #SenthilBalaji!

11:59 AM Sep 27, 2024 IST | Web Editor
Advertisement

உச்ச நீதிமன்ற நிபந்தனையின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

Advertisement

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 – 2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இவரது ஜாமீன் மனுவை விசாரித்து வந்தது.

இந்த சூழலில், இந்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்த உச்சநீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளி வைத்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நேற்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து ஆட்சேபனை இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இரவு 7 மணி அளவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற நிபந்தனையின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

Tags :
ChennaiDMKEDnews7 tamilSenthil balajiSupreme court
Advertisement
Next Article