Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு - #SupremeCourt இன்று தீர்ப்பு!

07:25 AM Sep 26, 2024 IST | Web Editor
Advertisement

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Advertisement

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது 2011 - 2016 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : #Bengaluru பெண் கொலையில் முக்கிய திருப்பம் – குற்றவாளியாக கருதப்படும் நபர் ஒடிசா மாநிலத்தில் சடலமாக மீட்பு!

நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இவரது ஜாமீன் மனுவை விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளி வைத்தது.இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்க இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags :
BailMinister Senthil BalajiSenthil balajiSupreme court
Advertisement
Next Article