Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இணைந்த முன்னாள் கால்பந்து வீரர்! 

03:17 PM Nov 23, 2023 IST | Web Editor
Advertisement

முன்னாள் இந்திய கால்பந்து அணியின் வீரரும்,  ஹம்ரோ சிக்கிம் கட்சியின் தலைவருமான பைச்சுங் பூட்டியா அவரது கட்சியை சிக்கிம் ஜனநாயக முன்னணியுடன்  இணைத்தார்.

Advertisement

2014-ம் ஆண்டு இந்திய கால்பந்து அணியில் இருந்து ஓய்வுபெற்ற பைச்சுங் பூட்டியா திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2014-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதனையடுத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி ஹம்ரோ சிக்கிம் கட்சியை தொடங்கி தற்போதைய ஆளும் கட்சியான சிக்கிம் கிராந்திகரா மோர்ச்சா கட்சியுடன் இணைந்து 2019-ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தார்.  அதிலும் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  இந்நிலையில் சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக கட்சியில் இணையப் போவதாக கடந்த செப்டம்பர் மாதம் அவர் அறிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:  தமிழ்நாட்டுக்கு தினமும் 2700 கன அடி நீர் திறக்க வேண்டும் – காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "சிக்கிம் ஜனநாயக கட்சியில் இருந்து ஊழல் செய்த தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளதால், எஸ்டிஎஃப் கட்சியானது ஊழல் கறையில் இருந்து விடுபட்டுள்ளது.

பவன்குமார் சாம்லிங் ஊழல் செய்தவர் என்று நீண்ட காலமாக சிக்கிம் கிராந்தி மோர்ச்சா குற்றம் சாட்டிவந்தது.   ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் எஸ்.கே.எம். கட்சியினால் ஒரு வழக்கு கூட அவர் மீது போடமுடியவில்லை. இதிலிருந்து சாம்லிங் ஊழல் செய்யாத தலைவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.  மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக சிக்கிம் ஜனநாயக முன்னணிதான் மாநிலத்தின் அனைத்து பிரச்னைகள் தொடர்பாகவும் குரல் கொடுத்து போராடி வருகிறது." என்று தெரிவித்தார்.

கடந்த 2019 தேர்தலை சிக்கிம் கிராந்தி மோர்ச்சாவுடன் இணைந்து எதிர்கொண்டோம். ஆனால் அந்த கட்சியில் இப்போது ஊழல் பேர்வழிகள் மட்டுமே உள்ளனர்." என்று குற்றம் சாட்டிய அவர் சிக்கிம் ஜனநாயக முன்னணியில் அவரின் ஹம்ரோ சிக்கிம் கட்சியை இணைத்து, அவரும் அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

Tags :
Bhaichung BhutiaFormer FootballerIndiaIndian Footballernews7 tamilNews7 Tamil UpdatesSikkim Democratic Front
Advertisement
Next Article