இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்...
09:13 AM Aug 01, 2024 IST
|
Web Editor
Advertisement
முன்னாள் கிரிக்கெட் வீரர் அனுஷுமான் கெய்க்வாட் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
ரத்த புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனுஷுமான் கெய்க்வாட்(71) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 1975-87ல் விளையாடினார். 40 டெஸ்ட்(1985 ரன்), 15 ஒருநாள் போட்டிகளில் (269 ரன்) பங்கேற்றார். ஓய்வுக்கு பின், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர், பயிற்சியாளராக இருந்தார்
இவரது உடல்நிலை குறித்து அறிந்த கவின் தேவ் உட்பட பல முன்னாள் வீரர்கள் சிகிச்சைக்காக பண உதவி செய்து வந்தனர். பிசிசிஐ சார்பாக இவருடைய சிகிச்சை செலவுக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இவருடைய மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்
Next Article