Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்!

11:10 AM Aug 11, 2024 IST | Web Editor
Advertisement

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் கடந்த இரு வாரங்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

Advertisement

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நட்வர் சிங் ஆகஸ்ட் 10ம் தேதி சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது, 2004-05 காலகட்டத்தில், நட்வர் சிங் வெளியுறவுத் துறை அமைச்சராக பணிபுரிந்து வந்தார். பாகிஸ்தானுக்கான தூதராகப் பணியாற்றிய நட்வர் சிங், 1966 முதல் 1971 வரையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அலுவலகத்திலும் பணிபுரிந்துள்ளார்.

இதையும் படியுங்கள் : லஞ்சமாக உருளைக்கிழங்கு… காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!

நட்வர் சிங் நாட்டிற்கு செய்த சேவைக்காக, அவருக்கு 1984 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 'ஒன் லைஃப் இஸ் நாட் எனஃப்' என்ற தலைப்பில் இவரது சுயசரிதை எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், நட்வர் சிங்கின் இழப்பிற்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Tags :
Former External Affairs MinisterNatwar Singhpassed away
Advertisement
Next Article