Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் ஜாமீனில் விடுவிப்பு - திருப்போரூர் நீதிமன்றம் உத்தரவு!

10:01 PM May 24, 2024 IST | Web Editor
Advertisement

பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு, திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ராஜேஸ் தாஷ் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள பியூலா வெங்கடேசனுக்கு சொந்தமான வீட்டில், ராஜேஷ் தாஸ் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றதாகவும், நுழைந்தபோது அனுமதிக்காத செக்யூரிட்டியின் செல்போனை பிடுங்கி சென்றதாகவும் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பியூலா ராஜேஷ் புகார் அளித்தார். மேலும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று ராஜேஷ் தாஸ் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டாம் என எழுதி கொடுத்ததாகவும் பியூலா வெங்கடேசன் தெரிவித்தார்.

இதனையடுத்து திட்டமிடுதல், அத்து மீறி உள்ளே நுழைதல், காவலாளியை தாக்கியது, அடியாட்களுடன் தாக்க முயன்றது, செல்போன் பறித்து சென்றது என ஐந்து பிரிவுகளின் கீழ் ராஜேஷ் தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ராஜேஷ் தாஸுக்கு  மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு திருப்போரூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டார்.

நீதிமன்றத்தில நுழைந்தபோது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. பின்னர் அவரை மீண்டும் அழைத்து வந்து, காவல்துறை வாகனத்திலேயே சற்று நேரம் ஓய்வெடுக்க வைத்து விட்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். விசாரணையில், தான் காவலாளியை பார்க்கவில்லை என்றும், இது பொய்யான புகார் என்றும் தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதி அனுப்பிரியா அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.

Tags :
Beela IAScaseFormer DGPRajesh Das
Advertisement
Next Article