Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Jamnagar அரச குடும்பத்தின் வாரிசாக நியமிக்கப்பட்டார் ஜடேஜா!

02:20 PM Oct 12, 2024 IST | Web Editor
Advertisement

குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜாம்நகர் சமஸ்தானத்தின் வாரிசாக அதிகாரப்பூர்வமாக அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

குஜராத் மாநிலத்தின் உள்ள ஜாம்நகர் பேரரசின் அடுத்த மன்னராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக நவாநகர் மகாராஜா ஜாம் சாஹேப் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஜாம்நகர் அரசர் சத்ருசல்யாசின்ஜி திக்விஜய்சின்ஹ்ஜி ஜடேஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜய் ஜடேஜா தனது வாரிசாக இருக்க ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சத்ருசல்யாசின்ஜி திக்விஜய்சின்ஹ்ஜி ஜடேஜாவின் சகோதரரின் மகன் தான் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா. கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா அரச குடும்பத்தில் பிறந்தவர். அவரது உறவினர்களான கே.ரஞ்சித்சிங்ஜி, மற்றும் கே.எஸ் துலிப்சிங்ஜி ஆகியோரின் நினைவாகத் தான் ரஞ்சிக் கோப்பை மற்றும் துலிப் கோப்பை கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் போலந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தலைநகர் வார்ஷாவில் உள்ள ஜாம் சாஹேப் நவாநகர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், தற்போது இந்த ஜாம் சாஹேப் நவாநகரின் அடுத்த வாரிசாக அஜய் ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்காக கடந்த 1992 முதல் 2000 ஆண்டு வரை அஜய் ஜடேஜா கிரிக்கெட் விளையாடி உள்ளார். மொத்தம் 15 டெஸ்ட் மற்றும் 196 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அஜய் ஜெய் ஜடேஜா விளையாடி உள்ளார். தனது அசாதாரண பீல்டிங் திறமையின் மூலம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட அஜய் ஜடேஜா, பல்வேறு தொடர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி உள்ளார்.

தொடர்ந்து சில பாலிவுட் படங்களில் நடத்து உள்ள அஜய் ஜடேஜா, சில தொலைக்காட்சி சேனல்களில் வெளியான தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக அஜய் ஜடேஜா நியமிக்கப்பட்டது பேசு பொருளாக மாறியது.

கிரிக்கெட் தவிர்த்து அஜய் ஜடேஜாவின் குடும்பம் அரசியலிலும் கொடி கட்டி பறந்தது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை தௌலத்சிங்ஜி ஜடேஜா மூன்று முறை ஜாம்நகர் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

Tags :
Ajay JadejaJamnagarJamnagar Royal FamilyJamnagar Royal Throne
Advertisement
Next Article