Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பண மோசடி வழக்கு | #LaluPrasadYadav, மகன்களுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

12:08 PM Oct 07, 2024 IST | Web Editor
Advertisement

பண மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது குருப்-டி பதவிகளுக்கு பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில்,ரயில்வே குருப் டி பணிகளுக்கு நியமிக்கப்பட்டவர்களில் பலரின் நிலங்களை லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் பெயருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக புகார் எழுந்தது.

லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி உள்ளிட்டோரின் பெயர்களில் நிலங்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளது. இந்த ஊழலில், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, மிசா பாரதி, தேஜஸ்வி யாதவ், அப்போதைய ரயில்வே பொது மேலாளர் உள்பட மொத்தம் 17 பேர் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2022, மே 18 ஆம் தேதி இது தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடந்த 2023, அக்டோபர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : #MarinaAirShow | “5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இதில் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை துணை குற்ற பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. முன்னதாக, அக்-7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி லாலு பிரசாத், தேஜஸ்வி ஆகியோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இதன்படி, பண மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ஜாமின் வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ உத்தரவிட்டுள்ளது. அவரது மகன்களான தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கும் ஜாமின் வழங்கிய நீதிமன்றம், தலா ரூ.1 லட்சத்திற்கான பிணைய தொகையை செலுத்த உத்தரவிட்டுள்ளது.

Tags :
BailFormer Bihar Chief MinisterLalu Prasad YadavNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article