"அணிகளில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் தடை" - பிசிசிஐ-யிடம் ஐபிஎல் உரிமையாளர்கள் கோரிக்கை!
அணிகளில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் ஐபிஎல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐபிஎல் 2024 மார்ச் 22ம் தேதி தொடங்கி மே 26ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டில் மே 26ம் தேதி நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதின.
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். இதற்கு முன்பாக ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : “சாவடிச்சிருவேன்” என சக வீரரை திட்டிய அஸ்வின் – “மற்றொரு விராட் கோலி” என கலாய்க்கும் நெட்டிசன்கள்!
அந்த வகையில் ஐபிஎல் சீசனில் இருந்து கடைசி நிமிடத்தில் விலகும் வெளிநாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிசிசிஐ-யிடம் ஐபிஎல் அணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் கடைசி நேரத்தில் அல்லது முக்கியமான கட்டத்தில் வெளிநாட்டு வீரர்கள் வெளியேறுவது வாடிக்காயாக உள்ளது.
இதனால், ஐபிஎல் அணிகளில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் ஐபிஎல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல வெளிநாட்டு வீரர்கள் கடைசி நேரத்தில் வெளியேறுவதை வழக்கமாக கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.