Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”வெளிநாட்டு முதலீடா? அல்லது வெளிநாட்டில் முதலீடா?”- முதலமைச்சருக்கு விஜய் கேள்வி!

தவெக தலைவர் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
03:32 PM Sep 20, 2025 IST | Web Editor
தவெக தலைவர் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று அவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Advertisement

அப்போது பேசிய அவர்,

”தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் துறைமுகம்; ஆனால் இங்கு நவீன வசதியுடன் மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத வீடுகள், குறிப்பாக அதிக குடிசைகள் கொண்ட மாவட்டமாகவும் நாகப்பட்டினம் தான் உள்ளது. இந்த முன்னேற்றத்திற்கு எல்லாம் எங்கள் ஆட்சி தான் சாட்சி என்று அடுக்கு முறையில் பேசியதை கேட்டு கேட்டு காதில் இருந்த ரத்தம் வந்தது தான் மிச்சம்  இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதையும், அதற்கான காரணத்தைப் பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் மதுரை மாநாட்டில் நான் பேசியது அவ்வளவு பெரிய குற்றமா?

மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் நம்முடைய கடமை. நம்முடைய உரிமை. நான் என்ன இன்று நேற்றா அவர்களுக்காக குரல் கொடுக்கிறேன், இதே நாகப்பட்டினத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பு 2011 பிப்ரவரி 22 ஆம் ஆண்டு மீனவர்கள் தாக்கப்பட்டதற்காக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் நான் வந்து கலந்து கொண்டேன். மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் இதே நேரத்தில் நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் அவர்கள் இலங்கையில் இருந்தாலும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் நமது கடமை இல்லையா?

மீனவர்களின் உயிர் எந்த அளவு முக்கியமோ அந்த அளவுக்கு இலங்கை தமிழர்களுடைய உயிரும் வாழ்வும் நமக்கு மிக முக்கியம்.மற்ற மீனவர்கள் இந்திய மீனவர்கள் நமது மீனவர்கள் தமிழக மீனவர்கள் இப்படி பிரித்து பார்த்து பேசுவதற்கு நாம் பாஜக இல்லை. நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதே நமது முக்கியமான எண்ணம்.

கடலோர கிராமங்களை மண் அரிப்புகளிலிருந்து பாதுகாக்கும் அலையாத்தி காடுகளில் இருந்து தடுத்து நிறுத்துவதை காட்டிலும் இந்த அரசுக்கு சொந்த குடும்பத்தின் வளர்ச்சியும்,சொந்த குடும்பத்தின் சுயநலமும் தான்  முக்கியமான வேலையாக உள்ளது. பாரம்பரிய கடல் சார்ந்த இந்த ஊரில் அரசு மெரைன் கல்லூரி கொண்டு வந்தார்களா? மீன் சம்பந்தமான எந்த தொழிற்சாலையும் அமைக்கப்படவில்லை. வேலைவாய்ப்பு கொண்டு வரும் வகையில் தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா? வெளிநாடு பயணம் சென்று வரும்போது எல்லாம் அத்தனை கோடி முதலீடு இத்தனை கோடி முதலீடு என்ன  சொல்கிறார் முதல்வர். சிஎம் சார் மனசாட்சி தொட்டுச் சொல்லுங்கள் வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என்று கேள்வி எழுப்பினார்.

 

 

Tags :
latestNewsNagapatnamTNnewstvkvijay
Advertisement
Next Article