Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ரூ.7,618 கோடி மதிப்பில் 19 ஒப்பந்தங்கள் | 11,500 பேருக்கு வேலைவாய்ப்பு | அமெரிக்க பயணம் - தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணம்!"

09:46 AM Sep 14, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகள் மூலம் 11 ஆயிரத்து 516 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் இன்று சென்னை திரும்பினார். அவர் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அமெரிக்க பயணத்தின் மூலம் 18 நிறுவனங்களுடன் மொத்தம் ரு.7618 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அமெரிக்க பயணம் ஒரு வெற்றிகரமான பயணம் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணம். இந்த பயணம் மிகப்பெரிய பயனுள்ள பயணமாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு அளித்த நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு FORD நிறுவனம் மீண்டும் தமிழகத்தில் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் இன்னும் பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமிழகத்திற்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது என்று கூறினார்.

Tags :
ChennaiDMKMK Stalintamil nadu
Advertisement
Next Article