Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தமிழ் மொழிக்கும், கலைக்கும், வளர்ச்சிக்கும்...” - கமல்ஹாசனின் வாழ்த்து பதிவு!

தமிழ் மொழிக்கும், கலைக்கும், வளர்ச்சிக்கும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அடுக்கு மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
06:11 PM Jun 03, 2025 IST | Web Editor
தமிழ் மொழிக்கும், கலைக்கும், வளர்ச்சிக்கும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அடுக்கு மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் இன்று(ஜுன்.03) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதைக் கொண்டாடும் வகையில், திமுகவினர் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனனர். அத்துடன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.

Advertisement

தொடர்ந்து கருணாநிதியின் 102வது பிறந்தநாளுக்கு,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட  பல்வேறு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று காலை சென்னை அண்ணா சதுக்கம் அருகில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தற்போது பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலைக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழர்தம் நலனுக்கும் தன் மொத்த வாழ்வையும் அர்ப்பணித்துச் செயலாற்றிய ஒப்பற்ற தலைவர் கருணாநிதியை அவர்தம் பிறந்த நாளில் போற்றுவதில் மகிழ்கிறேன்”

இவ்வாறு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Tags :
DMKKamal haasanM.KarunanidhiMNM
Advertisement
Next Article