Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை - காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்!

07:20 PM Feb 14, 2024 IST | Web Editor
Advertisement

தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில்,  காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். 

Advertisement

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்
பேக்கரிகள் மற்றும் குளிர்பான கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  பெரிய கடைவீதி பகுதியில் உள்ள பிரபல தனியார் பேக்கரியில் பழைய காலாவதியான பிரட், கூல் ட்ரிங்ஸ், மசால் கடலை, வடை, போண்டா, மற்றும் பலகாரம் செய்வதற்காக பயன்படுத்திய பழைய எண்ணை ஆகியவற்றை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அளித்தனர்.

அதனுடன் கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.  மேலும் கூல் ட்ரிங்ஸ் கடை, சிப்ஸ் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது செயற்கை நிறம் மூட்டியை பயன்படுத்தி பல சாறு தயாரித்த கூல்டிரிங்ஸ் விற்பனை நிலையத்திற்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.   அதன் பிறகு உணவு பாதுகாப்பு துறை லைசென்ஸ் எடுக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் காலாவதியான லைசென்ஸை வைத்திருந்த கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து, உடனடியாக அபராதத்துடன் லைசன்ஸ் புதுப்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.  மேலும் உணவு சார்ந்த கலப்படம், தரம் குறைவு போன்ற புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.  மேலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 19 கடைகளை ஆய்வு மேற்கொண்டதில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான 86.500 கிலோ மதிப்பிலான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

Tags :
#BakerydharapuramFood Safety DepartmentRaidTiruppur
Advertisement
Next Article