கோவையை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா!
கோவை மாநாகராட்சி மேயர் ராஜினாமாவைத் தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். கோவை 19 வார்டில் வெற்றிப்பெற்ற இவர் தனது உதவியாளர் மூலம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இந்நிலையில் இவரைத் தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் அளித்துள்ளார். இந்தக் கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில் 16 வது வார்டு கவுன்சிலராக சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து நெல்லை மாநகராட்சி மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சரவணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.