கெலவரப்பள்ளி அணையில் நீருடன் சேர்ந்து வெளியேறும் நுரை - விவசாயிகள் வேதனை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனிடையே கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் முழு கொள்ளளவான 44.28 அடிகளில் 40.67 அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 2,507 கன அடியாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் 2,450 கன அடிநீர் திறக்கப்பட்டு வருவதால் கெலவரப்பள்ளி அணை மற்றும் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தொடர்ந்து நான்காவது நாளாக கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அதிகப்படியான மழைக் பொலிவு காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவிலான ரசாயன நுரைகள் பொங்கி உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.