Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

09:31 AM Jul 15, 2024 IST | Web Editor
Advertisement

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

Advertisement

தென்காசி மாவட்டத்தின் சுற்றுலா இடங்களாக குற்றால அருவிகள் உள்ளன. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, பாலருவி, சிற்றருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவியருவி உள்ளிட்ட ஏராளமான அருவிகள் உள்ளன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வார விடுமுறை, தொடர் விடுமுறை போன்ற நாட்களில் இங்குள்ள அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்குள் நேற்று மாலை நேரத்தில் பெய்த தொடர் கன மழையின் காரணமாக  பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது! – 500 கிலோ வெடி மருந்து பறிமுதல்!

மேலும், தற்போது குற்றாலம் பகுதியில் தொடர் சாரல் மழையானது பெய்து வரும்
நிலையில், அருவிகளில் மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால்
ஆற்றப்படுகையின் ஓரமாக யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல்
வழங்கப்பட்டுள்ளது.

மழை குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலா
பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள்
குற்றாலம் பகுதிக்கு வருகை தந்து அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Next Article