Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Nepal நிலச்சரிவு - உயிரிழப்பு எண்ணிக்கை 170ஆக உயர்வு!

06:43 AM Sep 30, 2024 IST | Web Editor
Advertisement

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகிறது. கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் உள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. நேபாள் தலைநகர் காத்மாண்டுவிலும் கொட்டி தீர்த்த கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 170- திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பலர் மாயமாகி இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 3,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : பெண்ணின் பொய் புகார்! ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த இளைஞர்கள்! #UP நீதிமன்ற உத்தரவால் வெடித்த சர்ச்சை!

மீட்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 44 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. உள்நாட்டு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags :
FloodHeavyRainlandslidesNepalNews7Tamilnews7TamilUpdatesrainfall
Advertisement
Next Article