Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

03:50 PM Jul 24, 2024 IST | Web Editor
Advertisement

கர்நாடகாவின் கேஆர்எஸ் அணையிலிருந்து நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டனா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால்,  அணையில் இருந்து எந்த நேரமும் 30,000 கன அடி முதல் 50,000 கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நீர் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவு 124.8 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 123.76ஆக உள்ளது. அணையின் கொள்ளளவு முழுமையாக எட்ட வாய்ப்புள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அதிகளவு நீர் வெளியேற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 10,600 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags :
Department of Water ResourcesFlood AlertKarnatakakrs dam
Advertisement
Next Article