Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

03:33 PM Dec 17, 2023 IST | Web Editor
Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும்(டிச.17,18) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதிகப்படியான நீரை வெளியேற்றுவதில் ஏற்படும் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் கூடுதல் நீர் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தாமிரவருணி ஆறு மற்றும் இதர ஆறுகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ செல்ல வேண்டாம், மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
FloodFlood AlartKanyakumariNellaiNews7Tamilnews7TamilUpdatesReliefSouth TamilnaduTamilnadu RainsThoothukudiTirunelveliWeather
Advertisement
Next Article