Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெள்ள நிவாரணத் தொகைக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது!

01:42 PM Dec 14, 2023 IST | Web Editor
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரண வழங்குவதற்கான டோக்கன்கள் முதல்கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்தது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.

மேலும் வீடுகளில் இருந்த முக்கிய பொருட்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட படப்பை ஊராட்சி கீழ்படப்பை பகுதியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரண வழங்குவதற்கான டோக்கன்கள் முதல்கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement
Next Article