Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்" - முத்தரசன்

07:15 PM Dec 22, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த
பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

நெல்லை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களை
சந்தித்து ஆறுதல் கூறினார்.  தொடர்ந்து நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சேதம் அடைந்த வாழை, நெல் பயிர்களையும் ஆய்வு செய்தார்.

இதையும் படியுங்கள்: சென்னையில் ரூ.280 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. வாழைக்கு ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க வேண்டும்.  இதற்கு மத்திய அரசும் நிதி உதவி வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி ஆட்சி நடத்துகிறது என்று கருதாமல் நிவாரணத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Tags :
Heavy rainMutharasannews7 tamilNews7 Tamil Updatesrainfalltamil naduTirunelveliTn Rains
Advertisement
Next Article