Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

10 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் மீண்டும் துவங்கும் விமான சேவை!

03:27 PM Nov 08, 2024 IST | Web Editor
Advertisement

புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து 10 மாதங்களுக்கு பிறகு, வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

Advertisement

புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமானங்களை இயக்கி வந்தது. அதிக கட்டணம் காரணமாக
பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால், கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல்
இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவையை தொடங்க புதுச்சேரி
அரசு பல்வேறு விமான நிருவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து பெங்களூர், ஹைதராபாத் நகரங்களுக்கு விமானங்களை இயக்க இண்டிகோ நிறுவனம் முன்வந்துள்ளதாக விமான நிலையை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இண்டிகோ நிறுவனம் 72 பேர் பயணிக்க கூடிய (ATR-72) சிறிய ரக விமான
சேவையை வருகின்ற டிசம்பர் 20ம் தேதி முதல் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. காலை 11.10
மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் விமானம், பகல் 12.25 மணிக்கு புதுச்சேரி வந்தடையும் எனவும், பின்னர் புதுச்சேரியில் இருந்து 12.45 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மறு மார்க்கமாக பிற்பகல் 3.05 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம்
மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி வந்தடையும் எனவும், பின்னர் 5.10 மணிக்கு
புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மாலை 6.35 மணிக்கு மீண்டும் பெங்களூர்
சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Flight ServicesIndiGoPuducherry
Advertisement
Next Article