Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கையில் 2 வயது குழந்தையுடன் சாகசம் செய்த பெண்! - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

09:47 AM Jun 27, 2024 IST | Web Editor
Advertisement

புனேவை சேர்ந்த பெண் ஒருவர் கையில் தனது 2 வயது குழந்தையுடன் சாகசம் செய்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

தாயான பெண்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு, குடும்பச் சுழலுக்கேற்ப தங்களை மாற்றி கொள்கின்றனர்.  வெகுசிலரே அதில் இருந்து வெளிப்பட்டு தங்களது கனவுகளுக்காக செயல்படுகின்றனர் . அப்படியொரு சாதனை தாய், இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறார்.

அவர் கையில் தனது 2 வயது குழந்தையை வைத்திருக்கிறார்.  மற்றொரு கையில் 2 பாட்டில்களை வைத்து மேலே சுழலவிட்டு பிடித்து சாகசம் செய்கிறார்.  அதேபோல பாட்டிலில் தீப்பற்ற வைத்து அதையும் சுழலவிட்டு பிடிக்கிறார்.  இந்த சாகசத்தில் ஈடுபடும் போது அவர் புடவையே கட்டியிருக்கிறார்.  அந்த பெண் புனே நகரை சேர்ந்த கவிதா மேதார் என்று தெரிய வந்தது.  அவருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிகின்றன.

இதையும் படியுங்கள் : நீலகிரியில் கனமழை | கூடலூர்,பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

இந்நிலையில்,  இது தொடர்பான வீடியோ பதிவுகள் இணையத்தில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அ வர் சாகசம் செய்யும் வீடியோவை இணையத்தில் 45 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
babyfire-juggling bartenderflaming bottleshandKavita MedharPune
Advertisement
Next Article