Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆஸி., நியூசிலாந்து இடையிலான முதல் டி20 - கடைசிப் பந்தில் வெற்றியை கைப்பற்றிய ஆஸி!

05:11 PM Feb 21, 2024 IST | Web Editor
Advertisement

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ஆஸி அணி வெற்றி பெற்றது. 

Advertisement

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3டி 20 ஆட்டங்கள், 2 டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று வெலிங்டன் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ்க் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான பின் ஆலன் மற்றும் கான்வே சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.

32 ரன்னில் பின் ஆலன் அவுட்டானார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் டேவன் கான்வேயுடன் ஜோடி சேர்ந்து சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர்.
ரச்சின் 35 பந்தில் 68 ரன்னும், கான்வே 46 பந்தில் 63 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

நியூசிலாந்து அணி 20 ஓவரில் 215/3 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹேட் - டேவிட் வார்னர் களமிறங்கினர். ஹெட் 24 ரன்னிலும் வார்னர் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மேக்ஸ்வேல் 25 ரன்னிலும் இன்ங்கிலிஸ் 20 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த மார்ஷ் - டிம் டேவிட் அதிரடியாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் அரை சதம் கடந்தார். இறுதியாக 9 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டிம் டேவிட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பவுண்டரி அடித்து 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றினார் டிம் டேவிட். 216/4 ரன்கள் எடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

Tags :
#SportsAustraliaCricketnewzealandNZ vs AUS
Advertisement
Next Article