Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#AUSvsPAK | முதல் டி20 போட்டி - மழையால் 7 ஓவர்களாக குறைப்பு… பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

07:14 PM Nov 14, 2024 IST | Web Editor
Advertisement

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (நவ.14) நடைபெற்றது. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அங்கு கனமழை பெய்ததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆட்டத்தை தொடங்க நீண்ட நேரம் ஆனதால் 20 ஓவர்களுக்கு பதிலாக 7 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 43 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அபாஸ் அப்ரிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 94 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 7 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement
Next Article