Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'வீர தீர சூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் - படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்!

09:55 PM Jan 04, 2025 IST | Web Editor
Advertisement

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'வீர தீர சூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் 'வீர தீர சூரன்' என்ற படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இதில் விக்ரம் உடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சராமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தேனி ஈஷ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்தது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.  மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கபட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டைட்டில் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

https://x.com/gvprakash/status/1875511421422927951

படத்தின் டீசரும் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

 

Tags :
chiyan vikramdirector arun kumarDushara VijayanNews7Tamilnews7TamilUpdatessj suryaVeera Theera Sooran
Advertisement
Next Article