Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஃபகத் பாசில் நடிக்கும் புதிய படத்தின் “FIRST LOOK” போஸ்டர் வெளியீடு | இணையத்தில் வைரல்...

08:14 PM Jun 08, 2024 IST | Web Editor
Advertisement

ஃபகத் ஃபாசில் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் மற்றும் மலையாள திரைப்பட ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் நடிகர் ஃபகத் ஃபாசில். சமீபத்தில் இவர் நடித்த ஆவேஷம் படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பிரபல இயக்குநர் பாசிலின் மகனான ஃபகத் ஃபாசில் கையேத்தும் தூரத் என்கிற படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தப் படம் பெரிய தோல்வியை சந்தித்து ஃபகத் ஃபாசிலின்  நடிப்பு ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்த 7 ஆண்டுகள் எந்தப் படத்திலும் நடிக்காமல் முறையாக நடிப்பைக் கற்றுவந்தார் ஃபகத் . இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 2012ஆம் ஆண்டு வந்த அன்னயும் ரசூலும் படம் அவருக்கு நிறைய பாராட்டுக்களை பெற்றுத் தந்தது. ஐயோபிண்டே புஸ்தகம், மகேஹிண்டே பிரதிகாரம், கார்பன், பெங்களூர் டேஸ், கும்பளங்கி நைட்ஸ், ஜோஜி என அடுத்தடுத்த  படங்களில் தன்னைத் தேர்ந்த நடிகராக வெளிப்படுத்தினார் ஃபகத் ஃபாசில்  தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலஸ் மற்றும் மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஆவேஷம் படத்தைத் தொடர்ந்து ஃபகத் ஃபாசில் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . இந்தப் படத்தை ஃபகத் ஃபாசிலின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்கவிருக்கிறார். முன்பாக இவர் ஐயோபிண்டே புஸ்தகம், வரதன், பீஷ்ம பருவம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது அடுத்தபடியாக ஆக்‌ஷன் த்ரில்லர் ஒன்றை இயக்க இருக்கிறார். இப்படத்தில் ஃபகத் ஃபாசில் மற்றும் குஞ்சக்கோ போபன் உள்ளிட்டவர்கள் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தில் இருந்த ஃபகத் ஃபாசிலின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Tags :
AmalneeradFahadh Faasilkunchackoboban
Advertisement
Next Article