Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘எமகாதகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

10:03 PM Dec 29, 2024 IST | Web Editor
Advertisement

'எமகாதகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Advertisement

பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில், வெங்கட் ராகுல் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'எமகாதகி'. இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் உமா மஹேஷ்வர உக்ரா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர். இப்படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : #ProKabaddiLeague | பாட்னாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஹரியானா ஸ்டீலர்ஸ்!

எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags :
AishwaryaRajeshfirstlookposterPeppinGeorgeJayaseelanYamakaathagiyamakaathagi movie
Advertisement
Next Article