Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இந்தியாவிலேயே முதலிடம்... டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி விரைவு பயணம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
11:43 AM Apr 05, 2025 IST | Web Editor
Advertisement

2024-25ம் ஆண்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் (9.69%) தமிழ்நாடு புதிய உச்சத்தை எட்டி உள்ளதாக மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2023-24 நிதியாண்டில், ரூ.15,71,368 கோடியாக மதிப்பிடப்பட்ட மாநில உள்நாட்டு உற்பத்தி, 2024-25ல் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி இது எனவும் மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறை தகவல் அளித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,

"9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது! அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது.

அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்!"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

Tags :
cm stalinCMO TAMIL NADUDMKMK Stalinnews7 tamilNews7 Tamil Updatestamil naduTN Govt
Advertisement
Next Article