Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நயன்தாரா 75 படத்தின் டைட்டில் வெளியீடு - ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட்டது படக்குழு..!

08:42 PM Oct 24, 2023 IST | Web Editor
Advertisement

நயன்தாரா நடித்துள்ள 75வது படத்தின் டைட்டிலையும், ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, தற்போது இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப்படுத்தும் கதைகளில், நயன்தாரா நடித்த மாயா, அறம், கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் ஹிட் அடித்தன. முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடன் இணைந்து ப்ளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நயன்தாரா, தென்னிந்திய சினிமாவின் டாப் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

இதையும் படியுங்கள்: விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்படும்..! - புஸ்ஸி ஆனந்து அறிவிப்பு

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பான் இந்திய திரைப்படமான ‘ஜவான்’, அவரை வட இந்தியாவிலும் கொண்டு போய் சேர்த்தது.  இதனை தொடர்ந்து அறிமுக இயக்குநர் நீலேஷ் குமார் இயக்கத்தில், அவர் நடித்து வந்த நயன்தாரா 75 திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர்கள் ஜெய், சத்யராஜ் மற்றும் ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நயன்தாரா 75 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ‘அன்னப்பூரனி’ என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யாரடி நீ மோகினி, கோலமாவு கோகிலா ஆகிய திரைப்படத்தில் பார்த்த நயன்தாராவை மீண்டும் பார்ப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
AnnapooraniFirstGlimpseKollywoodLadySuperStarnayantharaNayanthara75TamilCinema
Advertisement
Next Article