இந்தியாவில் #iPhone புதிய வரவுகளின் முதல் நாள் விற்பனை - கடந்த ஆண்டைவிட 25% அதிகரிப்பு!
இந்தியச் சந்தையில் ஐபோன் புதிய மாடல்களின் முதல் நாள் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இட்ஸ் க்ளோடைம் நிகழ்வு நேற்று கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நடைபெற்றது. ஆப்பிள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமாக ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகியவற்றை செப்டம்பர் 9ம் தேதி வெளியிட்டது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆப்பிளின் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுடன், 4th ஜெனரேஷன் ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஐபோன் 15 ஃபோன்கள் வெளியான நிலையில் தற்போது ஐபோன் 16 மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஃப்ளாஷ் உடன் இந்த போன் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. கருப்பு, வெள்ளை, பிங்க், கிரீன் மற்றும் நீல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 16 வெளியிடப்பட்டிருக்கிறது. ஆப்பிள் ஐபோன் 16, 6.1 இன்ச் டிஸ்ப்ளே உடனும், ஐபோன் 16 பிளஸ் 6.7 இன்ச் டிஸ்ப்ளே உடனும், ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. பயனர்கள் விரைவாகவும், போன் ஹேங் ஆகாமல் பயன்படுத்துவதற்காக புதிய A18 chip பயன்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பம்சமாக இந்த போனில் ஆப்பிள் ஏஐ இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் போட்டோக்களை நீங்களாகவே விரும்பியவாறு எடிட் செய்து கொள்வதோடு, அதனை ஸ்டிக்கராகவும் மாற்றிக் கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் செப். 20 தனது புதிய மாடல்களின் விற்பனையை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியது. இதனை வாங்குவதற்கா மும்பை மற்றும் டெல்லியில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களுக்கு வெளியே கூட்டம் கூட்டமாக விடிய விடிய ஆவலுடன் காத்திருந்த ஐ- போன் பிரியர்கள் ஐ-போன் 16 மற்றும் 16 ப்ரோ ரக ஸ்மார்ட் போன்களை வாங்கி சென்றனர்.
ஐ-போன் 16 மற்றும் 16,ப்ரோ மேக்ஸ் ரகங்களை அந்த நிறுவனம் முறையே ரூ.79,900, மற்றும் 89,900, 128 ஜிபி ஐ-போன் 16 ப்ரோ ரூ.1,19,900 மற்றும் ரூ. 256 ஜிபி ஐ-போன் 16 ப்ரோ மேக்ஸ் ரூ.1,44,900-க்கு என விற்பனை செய்யப்பட்டது. இவற்றிற்கான ஆர்டர்கள் செப்டம்பர் 13 முதல் தொடங்கியது.
இந்திய ஸ்மார்ட்போன் வணிக சந்தையில் முந்தைய ரக ஐ-போன்களைவிட குறைவான விலையில் புதிய ரகத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்துவது இதுவே முதல்முறை. இந்த நிலையில், ஐ-போன் 16 மற்றும் 16 ப்ரோ ரக போன்கள் முதல் நாள் விற்பனை சிறப்பாக இருந்தததாகவும், கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகமாக நடைபெற்றுள்ளதாக ஒரு சில விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை விட ஐ-போன் 16 மற்றும் 16 ப்ரோ ரக ஸ்மாா்ட் போன் முதல் நாள் விற்பனை 20 சதவீதம் அதிகமாக நடந்துள்ளது, அதே சமயம் 16 ப்ரோ மாடல்களின் விற்பனை 25 சதவீதம் அதிகமாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.